search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் விபத்து"

    சோழவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருநங்கை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பாடியநல்லூர் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுகந்தி (29). திருநங்கையான இவர் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் இருந்து பன்னீர்வாக்கம் செல்லும் சாலையில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புல்லரம் பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி வயது 55). டீ மாஸ்டர். நேற்று இரவு அவர் வேலை முடிந்து திருப்பாச்சூரில் இருந்து புல்லரம் பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    டோல்கேட் அருகே வந்த போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராகிக் குமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து லட்சுமிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றபோது மாநகர பஸ் மோதிய விபத்தில் வாலிபர் இறந்ததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் பஸ்சுக்கு தீவைத்தனர்.
    செவ்வாப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த உடையார் கோவில் காலனியைச் சேர்ந்தவர் பாரத். இவர் நேற்று இரவு வெள்ளவேடு இருங்காளி அம்மன் கோவில் அருகே சாலையை கடந்தபோது வெள்ளவேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் மோதியதில் அவர் இறந்தார்.

    இதுபற்றி அறிந்ததும். பாரத்தின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்தனர். உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.

    அப்போது டிரைவர் இருக்கைக்கு சிலர் தீவைத்தனர். இதில் இருக்கை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இல்லையென்றால் தீ பஸ் முழுவதும் பரவி இருக்கும்.

    பின்னர் பாரத் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நெல்வாய் சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன், திருநின்றவூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்றுபணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற போது தொழுவூர் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ×